கி.இலக்குவன்
தேர்தல்களில் பணம் விளையாடுவது என்பது இப்போது திடீரென்று தோன்றிய நிகழ்வு அல்ல. இந்திய நாட்டின் ஜனநாயகத் தேர்தல்கள் நடைபெறத் துவங்கிய காலத்திலி ருந்தே இது நிகழ்ந்துவரும் ஒன்றுதான். ஆனால் முந்தைய காலங்களில் சட்டமன்றத் தொகுதிகளின் சில பகுதிகளில் சிறிய அள வில் மட்டும் ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெற்று வந்தன. ஒரு குறிப்பிட்ட நாட் டாண்மைக்காரரை சரிப்படுத்திவிட்டால், சில நூறு வாக்குகளை வாங்க முடியும் என் றால் அந்த இடங்களில் சில ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்படும். ஆனால் பல்வேறு தேர் தல்களின்போது ஆளுங்கட்சி ஒன்றை தோற்கடிப்பது என்று மக்கள் முடிவு செய்து விட்டால் அந்த கட்சி எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் வெற்றிபெற முடியாது என்ற நிலை இருந்து வந்தது. இந்த வகை யில் மக்களின் உணர்வுகள் பல ஆட்சி மாற் றங்களுக்கு வழிவகுத்த அனுபவங்களை நாடு சந்தித்தது.
செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகத் துறை முழுமையான நடுநிலையுடன் என்றுமே செயல்பட்டதாகக் கூறமுடியாது. அவற்றுக் கேயான அரசியல் சார்பு இருந்து வந்துள்ளது. ஆனால் அவையும் களச்சூழலை ஓரளவுக்கு பிரதிபலித்து வந்தன. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சம அளவில் இல்லையென்றாலும் இருட் டடிப்புச் செய்யாமல் வெளியிட்டு வந்தன. அவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் தலைகீழாக மாறிப்போய்விட்டன.
கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் திருமங் கலத்தில் நடைபெற்ற தேர்தல், பணபல விளையாட்டின் உச்சகட்டமாகத் திகழ்ந்த வெளிப்படையான பணவிநியோகம், பிரி யாணி விருந்துகள், பரிசுப்பொருட்களை வழங்குதல் போன்றவை விரிவான அளவில் நடைபெற்றன. திருமங்கல பாணி தேர்தல் முறை என்று அகில இந்திய ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு அவக்கேடானவை யாக அவை இருந்தன.
இந்திய நாட்டுப் பத்திரிகை உலகமும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வேட்பாளர் கள் மற்றும் கட்சிப் பிரச்சாரம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கே கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதைப் புகழ்பெற்ற பத்திரிகையாளரான பி.சாய்நாத், ‘இந்து’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் (26.10.2009) ஏராளமான விபரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.
கைபேசி நிறுவனங்கள் உள்ளூர் அழைப் புகளுக்கு இவ்வளவு கட்டணம், வெளியூர் அழைப்புகளுக்கு இவ்வளவு கட்டணம் என் றெல்லாம் பல்வேறு கட்டண விகிதத் திட்டங் களை அறிவிப்பதைப்போல, மகாராஷ்டிரா மற் றும் ஆந்திர மாநிலப் பத்திரிகைகளும் தேர் தல் செய்திகளை வெளியிடுவதற்கு கட்ட ணங்களை நிர்ணயம் செய்திருந்தன. ஒரு வேட்பாளரை பற்றி எந்தவொரு செய்தி வர வேண்டுமென்றாலும் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. பணம் கிடையாது என்றால் செய்தியும் கிடையாது என்ற விதியே நடைமுறையாயிற்று. வசதி குறைவான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் தொடர்பான செய்திகள் இருட்ட டிப்பு செய்யப்பட்டன. இந்த சிறிய கட்சிக ளால் எழுப்பப்பட்ட உண்மையான பிரச்ச னைகள் வாக்காளர்களுக்கு தெரியாத வண் ணம் மறைக்கப்பட்டன. மக்களவைத் தேர் தல்களின்போது சிறிய அளவிலான செய்தி களை வெளியிடுவதற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதும், பெரிய அளவிலான செய்திகளை வெளியிடு வதற்கு பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப் பட்டது குறித்தும் (2009 ஏப்ரல் 7ம் தேதி) ‘தி இந்து’ செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் இது பலமடங்கு அதிகரித்துள்ளதை காண முடிந்தது.
சாய்நாத் கூறுகிறார் (தி இந்து, 26.10.09)
“பேரங்கள் பலவாகவும் விதவிதமாகவும் இருந்தன. வாழ்க்கைக்குறிப்புகள், பேட்டிகள், சாதனைப் பட்டியல், எதிரணி வேட்பாளரைத் தாக்கி எழுதுவது போன்ற ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கட்டணங்கள் விதிக்கப்பட்டி ருந்தன. (தொலைக்காட்சி சேனல்களைப் பொருத்தவரை ‘நேரடி ஒளிபரப்புகள்’ ‘சிறப் புக்காட்சிகள்’, ஒருநாளில் பல மணிநேரங் கள் வேட்பாளர் பின்னாலேயே சென்று செய்தி களை அளித்தல் போன்றவற்றுக்கு தனித் தனியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டி ருந்தன.) எதிரணி வேட்பாளருக்கு எதிரான வசவுகள், ஒருபுறமிருக்க, கட்டண விகித ஏற் பாட்டின்படி ஒரு வேட்பாளருக்கு எதிரான குற்றப்பதிவுகள் வாக்காளர்களுக்கு தெரிவிக் கப்படாமல் இருப்பதும் உறுதி செய்யப்படு கிறது. சிலரது சாதனைகளைப் போற்றிப்புக ழும் செய்திகளை வெளியிடும்போது, அவர் களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற நடவடிக் கைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.”
தமிழ்நாட்டு செய்தித் தாள்களும் ஊடகங் களும் எந்த அளவுக்குக் கட்டண வசூலில் ஈடுபட்டன என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. ஆனால் ஐயப் பாடுகளை ஏற்படுத்திய சில செய்திகளைப் பற்றிக் குறிப்பிடமுடியும். மதுரை நாடாளு மன்ற உறுப்பினராக இரண்டு முறை செயல் பட்ட தோழர் பொ.மோகன், தொகுதி மக்களுக் காக ஆற்றிய சாதனைகள் பலரால் இன்றும் புகழப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் எந்த சாதனையையும் நிகழ்த்தவில்லை. மக்கள் மத்தியில் அவரைப்பற்றி பெரும் அதிருப்தி நிலவுகிறது என்பது போன்ற செய்திகள், சில நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் மக்கள வைத் தேர்தலின்போது வெளியிடப்பட்டன. அதேபோல மோகனின் சார்பாளர்கள் வாக்கா ளர்களுக்குப் பணம் கொடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்டதாக அவதூறுச் செய்தி கள் பரப்பப்பட்டன. இவை மார்க்சிஸ்ட் கட்சி யின் பால் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரண மாக வெளியிடப்பட்டனவா அல்லது பணத் தின் விளையாட்டு அதன் பின்னணியாக இருந் ததா என்பது பரிசீலிக்கப்படவேண்டிய விஷயம்.
“மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர் தல்களின்போது சில பத்திரிகைகள் சில வேட்பாளர்களுக்காக சிறப்பு இணைப்பு களையும் வெளியிட்டன. மாநிலத்தின் மிக முக்கியமான அந்த வேட்பாளர் அளித்த கட் டணம் ரூ. 1.5 கோடியாகும்.”
2004ம் ஆண்டு தேர்தலின்போது ஒரு வேட்பாளரின் சொத்துவிபரத்தையும் 2009ம் ஆண்டு தேர்தலின்போது அவர் அளித்துள்ள சொத்து விபரங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால், இடைப்பட்ட காலத்தில் அவர் ஈட்டிய வரு மானத்தின் அளவை மதிப்பிட்டுவிட முடியும்.
மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவி வகித்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சொத்து, 2004க்கும் 2009க்கும்இடைப்பட்ட காலத் தில் ரூ.2 கோடியே 70 லட்சம் அளவுக்கு அதி கரித்துள்ளது. அதாவது சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.55 லட்சம் அதிகரித்துள்ளது.
சுரேஷ் ஜெயின் என்ற சட்டமன்ற உறுப் பினரின் சொத்து 2004ல் 26 கோடி ரூபாயாக இருந்தது. இது 2009ல் 79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சரா சரியாக மாதத்துக்கு 80 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பி னர்களானவர்களில் 108 கோடீசுவரர்கள் இருந்தனர் என்றால், 2009 தேர்தலில் மொத்த முள்ள 288 சட்டமன்ற உறுப்பினர்களில் 184 பேர் கோடீசுவரர்கள்.
பி.சாய்நாத் அளித்துள்ள ஏராளமான விப ரங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே உதா ரணங்களாக அளித்துள்ளோம். சமீப ஆண்டு களின் சட்டமன்றத் தேர்தல்களும், நாடாளு மன்றத் தேர்தல்களும் கோடீசுவரர்கள் மட் டுமே புகுந்து விளையாடக்கூடிய களங்க ளாக மாறியுள்ளன. இது இந்திய ஜனநாயகத் துக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. தேர்தல் ஆணையம் மிகவும் கடுமையான விதிகளை கறாராக அமல்படுத்தி வருவது போன்ற தோற்றம் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவருவது உண்மையே. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டுப் போடுவது, போன்றவற்றுக்கு எதிரான சில நடவடிக்கைகளை அது எடுத்து வந்துள்ளது என்பது உண்மையே. ஆனால் வாக்காளர்க ளுக்கு பண விநியோகம், செய்தித்தாள்களை யும் ஊடகங்களையும் விலைக்கு வாங்குவது போன்ற முறைகேடுகளுக்கு எதிராக எத்த கைய உருப்படியான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை. சுவரெழுத்து பிரச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தேர் தல் ஆணையம், பிரியாணி விருந்துகளை தடுத்து நிறுத்துவதற்கு எத்தகைய நட வடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இத்தகைய முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் பெரும் அளவிலான தேர்தல் சீர்திருத்தங்கள் அவசர அவசிய தேவையாக மாறியுள்ளன. தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு பதிலாக கட்சிகள் போட் டியிடக்கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை, ஊடகங்களின் மூலம் நடைபெற வேண்டிய பிரச்சாரத்துக்கான செலவுகளை அரசே ஏற்பது போன்ற தேர்தல் சீர்திருத்த ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் ஜனநாயகம் ஒரு கேலிக் கூத்தாக மாறாமலிருக்க வேண்டுமானால், தேர்தல் சீர்திருத்தங்கள் அவசர அவசிய தேவையாக மாறியுள்ளன. இந்திய நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், இவை குறித்து சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டும்.
- தீக்கதிர்
Thursday, 19 November 2009
Friday, 30 October 2009
புவி வெப்பமாதல் ஒரு விஞ்ஞானத் தில்லுமுல்லு!
சமஸ்
புவி வெப்பமாதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வளரும் நாடுகளின் எதிர்காலத்துடனும் பல லட்சம் கோடி ரூபாய்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்னை. புவியின் சராசரி வெப்பத்தின் அளவு அதிகரித்துவருகிறது. வளி மண்டலத்திலுள்ள கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிப்பதுதான் இதற்கான முக்கிய காரணம் என்பதே புவி வெப்பமாதல் கருதுகோளின் அடிப்படை. ஆகையால், பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தியை - குறிப்பாக, கரியமில வாயுவின் அடர்த்தியைக் குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதே இப்பிரச்னைக்கான முடிவாகக் கருதப்படுகிறது. கரியமில வாயு அதிகரிப்புக்கு மிக முக்கியமான பெட்ரோலியப் பொருள்கள் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பதும் அதிக மாசற்ற "செம்மையான இயந்திரவியல்' கொள்கைக்கு மாறுவதும் புவி வெப்பத்தைத் தணிக்க முக்கியத் தீர்வுகளாக முன்வைக்கப்படுகின்றன. "செம்மையான இயந்திரவியல்' என்பதை விரிவான பொருளில் சொல்வதென்றால், இப்போதுள்ள பழைய தொழில்நுட்பத்தை அப்படியே கடாசிவிடுவது என்பதேயாகும். விறகு அடுப்புக்குப் பதில் சூரிய சக்தி அடுப்பு என்பதில் தொடங்கி ஹைட்ரஜனில் இயங்கும் மொபெட்டுகள், ஹைபிரிட் கார்கள் வரை எல்லாமே புதியவையாகும். "கார்பன் கிரெடிட்ஸ்' வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் (ஏற்கெனவே, தூய்மையான முன்னேற்றத் தொழில்நுட்பத் திட்டங்களில் (சிடிஎம்) 32 சதத் திட்டங்களில் இந்தியா பங்கேற்றுள்ளது). இன்றைய தேதியில் உலகிலுள்ள பெரும் தொழிற்சாலைகளை மட்டும் "செம்மையான இயந்திரவிய'லின் கீழ் கொண்டுவர மட்டுமே ரூ. 16 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது, 2030-ல் உலக மாசு அளவை 2007 அளவுக்குக் கொண்டுவர ரூ. 20 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள். இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்-இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களாக வளர்ந்த நாடுகளே இருக்கிறார்கள் என்பதாகும். அதாவது மாசற்ற உலகுக்கான இந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளை ஈட்டித் தரும். இந்தியாவின் கரியமில வெளியீட்டில் சரி பாதி அளவு இந்தியத் தொழிற்சாலைகளால் வெளியிடப்படுவதாக வளர்ந்த நாடுகள் குற்றஞ்சாட்டும் நிலையில், "செம்மையான இயந்திரவிய'லுக்கு மாற இந்தியத் தொழில்துறை எத்தனை லட்சம் கோடிகளைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதும் சர்வதேசத் தொழிற்போட்டியில் இந்தியாவுக்கு இந்தச் செலவு எத்தகைய பின்னடைவுகளை உருவாக்கும் என்பதையும் விவரிக்க வேண்டியதில்லை. உண்மையில், கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க முதலில் தலைப்பட வேண்டிய நாடு அமெரிக்காதான். தனி நபர் கரியமில வாயு உமிழ்வு அமெரிக்காவில் 19.70 மெட்ரிக் டன்களாக இருக்கிறது. இந்த உமிழ்வு ரஷியாவில் 11 மெட்ரிக் டன்களாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 9.17 மெட்ரிக் டன்களாகவும், இந்தியாவில் 1.31 மெட்ரிக் டன்களாகவும் இருக்கிறது. மேலும், 2030-ல்கூட இந்தியாவில் தனிநபர் ஆண்டு கரியமில வாயு உமிழ்வு உலக சராசரியான 4.22 டன்னை தாண்ட வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மாசின் உச்சத்திலிருக்கும் அமெரிக்கா இன்னமும் கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க சர்வதேச ஒப்பந்தங்கள் எதிலும் கையொப்பமிடாத நிலையில், இந்தியாவையும் சீனாவையும் நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏனைய வளர்ந்த நாடுகளும் அமெரிக்காவுக்கு ஒத்தூதுகின்றன. புவி வெப்பமாதல்பற்றி முதல் பேச்சு எழுந்த காலத்திலிருந்தே இந்தக் கருதுகோளே தவறு என்ற பேச்சும் வலுவாகத் தொடர்கிறது. ""புவி வெப்பமாதலும் குளிர்தலும் தொடர்ந்து சங்கிலித் தொடராக நிகழ்ந்துகொண்டிருப்பவை; இயற்கைச் சீர்கேடுகளுக்கும் இந்தக் கருதுகோளுக்கும் தொடர்பில்லை'' என்று ரஷிய விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ""புவி வெப்பமாதல் மிகப் பெரிய விஞ்ஞான தில்லுமுல்லு'' என்கிறார் ரஷிய விஞ்ஞானி ஆந்த்ரே காப்டிசா. இது தொடர்பாக அண்டார்டிகாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ள அவர், 1970-களில் பெரிதாக இப்படிக் கிளப்பிவிடப்பட்ட புவி குளிர்மயமாதல் இப்போது புஸ்வாணமாகிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். வளரும் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளும் ஓர் உத்தியே புவி வெப்பமாதல் கருதுகோள் என்று ரஷிய விஞ்ஞானிகள் தீவிரமாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். இது ஒருபுறமிருக்க, ""மாசடைந்துவரும் சூழல் - அருகிவரும் இயற்கை வளங்கள் - மாறிவரும் தட்பவெப்பம் ஆகியவை புவிச் சூழலில் மிகப் பாதகமான அம்சங்களே. ஆனால், பூமி ஓர் உயிருள்ள செல். தன்னைத்தானே தகவமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை புவிக்கு இருக்கிறது'' என்ற கருதுகோளும் காலங்காலமாக விஞ்ஞானிகளிடையே இருந்து வருகிறது. புவி வெப்பமாதலின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக இருக்கும்போது அதன் பெயரால் முன்வைக்கப்படும் தீர்வுகள் எந்த அளவுக்கு நம்பகமானவை? புவி வெப்பமாதலுக்கு முன்வைக்கப்படும் தீர்வுகளை, நிர்பந்தங்களை ஏற்றுக்கொண்டால், அதனால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நாடாக இந்தியாவே இருக்கும். தொழில்துறை சார்ந்து மட்டுமல்ல; இன்னமும் மின்சாரத்தைப் பார்க்காத கோடிக்கணக்கான இந்தியக் கிராமவாசிகளையும்கூட அது பாதிக்கும். அனல் மின்சாரத்துக்கு மாற்றாக அவர்களுடைய உள்நோக்கம் அணு மின்சாரத்தை விற்பதாகவே இருக்கிறது. பெட்ரோலியப் பொருள்களுக்கு மாற்றாக உயிரி எரிபொருளையே முன்வைக்கிறார்கள். இதனால், ஏற்படும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கு மாற்றாக மரபீனி மாற்றுப் பயிர்களை முன்வைக்கிறார்கள். உண்மையில் இவையெல்லாம் இப்போதுள்ள சூழலியல் அபாயங்களைவிடவும் பேரபாயங்களையே தோற்றுவிக்கும். கட்டாய மழைநீர் சேகரிப்பு, கிராமங்கள்தோறும் பாசனக் குட்டைகள் அமைத்தல், கட்டாய மர வளர்ப்பு, வனப்பரப்பை அதிகரித்தல், திட, திரவக் கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கட்டுப்பாடு, சூழலுடன் இயைந்த தொழில் வளர்ச்சித் திட்டம், நதிகள், கடல், காற்று மாசுக்களைத் தடுத்தல்... இப்படிச் சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்தியா மேற்கொள்ள வேண்டிய காரியங்கள் ஏராளம். இவற்றையெல்லாம் தீவிரமாக அரசு செயல்படுத்தலாம். ஆனால், வளர்ந்த நாடுகளின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து அவற்றின் நிலைப்பாட்டுக்கு ஒத்திசைத்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடிப்படைக் கட்டமைப்புக்கும் அது பெரும் ஆபத்தையே விளைவிக்கும். இன்னொரு வரலாற்றுத் தவறுக்கு வழிவகுக்கும்!

தினமணி 29.10.2009
Friday, 25 September 2009
மக்கள் நல்வாழ்வு - பொறுப்பை தட்டிக்கழிக்கும் தமிழக அரசு
எஸ். விஜயன்
கடந்த ஜூலை மாதம் படாடோபமாக நடைபெற்ற ஒரு அரசு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ‘‘உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்திட்டம்”. இத்திட்டப்படி ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் இருக்கும் மக்கள், சில உயிர் காக்கும் சிகிச்சைகளை செய்து கொள்ள முடியும். இத்திட்டத் தின் கீழ் வருபவர்கள் சுமார் 75 லட்சம் குடும்பங்கள் அடங்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. இதில் அரசின் 12 நலவாரியங் களில் பதிவு செய்யப்பட்ட 35 லட்சம் உறுப்பினர் களும் ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் உள்ள குடும்பங்களும் அடங்கும். இதற்கான செலவு ஆண்டுக்கு 517.307 கோடி ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு இத்தொகை ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும். இந்நிறுவனம், இதன் பயனாளிகளுக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்கும். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்கான கட்டணத்தை ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் திரும்பக் கொடுக்கும். இத்திட்டப்படி 4 வருடங்களில் குடும்பம் ஒன்று ரூ1 லட்சம் வரை சிகிச்சை பெற அனுமதிக்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ 466 வீதம் 4 வருடங்களுக்கு 75 லட்சம் குடும்பங்களுக்கான பிரிமியத்தை அரசு செலுத்தும். குடும்பத் திற்கு 5 பேர் என்று கணக்கிட்டால் கூட இது தமிழகத்தின் சரிபாதி பேர் இத்திட்டத்தின் கீழ்வருவார்கள்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு கண்துடைப்பு
இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில் (அரசாணை எண் 49) தமிழக அரசானது, மக்கள் நல்வாழ்விற்காக ஆண்டுதோறும் 2800 கோடி ரூபாய் செலவிடுவதாகவும் ஆனால் சில உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு நிதியுதவி செய்யுமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் ஆகியோருக்கு மனுக்கள் வந்த வண்ணம் உள்ளதால், அரசே நிதியளிக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. Òபுதிய காப்பீட்டுத் திட்டத் திற்கு கலைஞர் பெயர் சூட்டுவதற்கு ஒரு அரசாணையும் (அரசாணை எண் 72) காப்பீட்டுத்திட்டம் அமலுக்கு வந்ததற்கு ஒரு அரசாணையும் (அரசாணை எண் 200) வெளியிடப் பட்டுள்ளது.
நமது நாட்டில் செயல்படும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அரசிடமிருந்து பலகோடி ரூபாய்களுக்கு வரிச் சலுகைககள் பெற்றுவருகின்றன. உதாரணத்திற்கு, இம் மருத்துவமனைகள் இறக்குமதி செய்யும் கருவிகளுக்கு இறக்குமதி வரி செலுத்தத் தேவையில்லை. இம்மருத்துவமனைகளுக்கு அரசே இலவசமாக இடம் வழங்கியுள்ளது. மின்கட்டணம் வியாபார நிறுவன கட்டணம் கிடையாது. தண்ணீருக்கு அதிக வரி செலுத்த வேண்டியதில்லை. இவைகளின் கட்டுமானத் திற்காக வாங்கிய பொருட்களுக்கு வரிச்சலுகை உண்டு போன்றவைகள் அடங்கும். இதற்கு மாறாக இவைகளில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளில் முப்பது சதவீதமான வர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அரசிற்கு கொடுத் துள்ளன. எனினும் இந்த உத்தரவாதம் நடைமுறைப்படுத்த வில்லை. நடைமுறை படுத்தப்படுகிறதா என்பதை கண் காணிக்கும் அமைப்பும் அரசிடம் இல்லை. உதாரணத்திற்கு சென்னை அப்பொல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகளில் உண்மை யாகவே முப்பது சதவீதம் பேர் ஏழைகளாகவும் இலவசமாகவும் சிகிச்சை பெறுகின்றனர் என்றால், அரசிற்கு எவ்வளவு பிரிமியம் தொகை மிஞ்சும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தப் பட்டால், அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மருத்துவ உதவி வேண்டும் என்ற மனுக்கள் ஏன் குவிய வேண்டும்? கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் அமைப்பை ஏன் அரசு இதுவரை ஏற்படுத்தவில்லை? இதைச் செய்திருந்தால் இத்தகைய காப்பீட்டுத் திட்டம் தேவையே இல்லையே! எனினும் இந்த காப்பீட்டுத் திட்டத்தை ஐந்து முக்கியமான அம்சங்களில் நாம் அலச வேண்டியதுள்ளது.
கடமையிலிருந்து வழுவிச் செல்லும் அரசு
முதலாவது அம்சம், மக்கள் நல்வாழ்வை பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்ற கருத்தில் ஏற்பட்ட மாற்றம். இந்த கடமையை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இயங்கும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் ‘அவுட்சோர்°’ செய்வது என்பதை ஏற்க முடியாது. தன்னிடம் உள்ள கட்டமைப்பை பயன்படுத்தி நல்வாழ்வு சேவைகளை இலவசமாக வழங்கும் வாய்ப்பு அரசிற்கு அதிகமாக இருக்கும் போது காப்பீட்டுப் பாதையை அரசு ஏன் தேர்ந்தெடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது. மக்கள் அனைவ ருக்கும் இலவசமான எளிதில் கிடைக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திட்டங்களை சரிவர நிறைவேற்றாமல், பொதுத்துறை மருத்துவ சேவைகளை குறை கூறுவதன் மூலம், தனியார் துறையை வளர்க்கவும் - கொஞ்சம் கொஞ்சமாக பொதுத்துறையை நாசப்படுத்தும் வேலையைச் செய்யவும், அரசுக்கு இது போன்ற காப்பீட்டுத் திட்டங்கள் உதவும். உலகமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படைக் கூறுகளான, அரசு, பொருளாதாரத்திலிருந்து விலகியிருத்தல், சேமநல நடவடிக்கைகளை அரசு கைவிடல், தனியார்மயமாக்கல் ஆகியவற்றிலிருந்து மக்கள் நல்வாழ்வு மட்டும் விலக்களிக்கப் பட்டிருப்பதாக உலக வங்கி போன்ற நிறுவனங்களே கூறியுள்ளன. கனடா, ஃபிரான்° போன்ற முதலாளித்துவ நாடு களில் கூட அனைத்து மக்கள் நல்வாழ்வுச் செலவுகளும் அரசே செய்கின்றது. கியூபா போன்ற சோசலிச நாடுகளில் சோசலிச குடியரசு அமைக்கப் பட்ட தினத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுச் செலவை முழுமையாக அரசு ஏற்றுக் கொண்டு ள்ளது. ஆனால் சோசலிசக் குடியரசு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியாவில் நல்வாழ்வுச் செலவில் 80 சதவீதத்தை மக்கள் தங்கள் கைப்பணத்திலிருந்து செலவிடும் அவல நிலைதான் உள்ளது. இதனால், உலகிலேயே மிக அதிகமாக தனியார்மயப் படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுச் சேவைகளை கொண்ட நாடு இந்தியா என்ற மோசமான அந்த°தைப் பெற்று விட்டது. இது சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படை கோஷங்களில் ஒன்றான “எல்லோருக்கும் நல்வாழ்வு” என்பதிலிருந்து விலகிச் செல்வ தாகும். 1948இல் ஏற்கப்பட்ட போரே கமிட்டி பரிந்துரையின் அடிப்படை அம்சமான “காசு இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவம் மறுக்கப்படக் கூடாது” என்பதையும் நோய் சிகிச்சையை விட, நோய் தடுப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையும் மறுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. முதலில் காப்பீட்டுத் திட்டம் மூலம் அரசே காசு கொடுப்ப தாகவும், பிறகு காசு கொடுப்பதையும் பற்றாகுறை யாக்கி (தற்போதும் அதுதான் நிலைமை) இறுதியில் காசு கொடுப்பதை அறவே நிறுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் படிப்படியாக செல்லும் போக்கே காப்பீட்டுத் திட்டப் பாதை. அரசிற்கும் மக்கள் நல்வாழ்விற்கும் சம்பந்தமில்லை, அவரவர்கள் மருத்துவச் செலவை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலையை பண்பாட்டு ரீதியாக உருவாக்கும் நோக்கம் கொண்டதே காப்பீட்டுப் பாதை மூலமாக நல்வாழ்விற்காக திட்டமிடுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
காப்பீடு என்றொரு தொழில்
இரண்டாவது அம்சம், காப்பீட்டுத் திட்டம் செயல்படும் முறை பற்றியது. முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் யாதெனில் காப்பீட்டு உறுதி கொடுக்கும் நிறுவனம் பொதுத் துறையில் உள்ளதா தனியார் துறையில் உள்ளதா என்பது தான். மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் நம்நாட்டில் உண்டு. காப்பீட்டு வணிகத்தில் பொதுத்துறை ஈட்டும் லாபம் (உபரி என்று குறிப்பிடப்படுகிறது) அரசு கெள்கைகளின் அடிப்படையில் சமூகத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். தனியார்துறை ஈட்டும் லாபம் தனியாரின் சொத்துக் குவியலாக மாறும். இது இந்த துறை செயல்படுவதில் உள்ள ஒரு பொதுவான அம்சம்.
தமிழகத்தில் அரசின் உயிர்காக்கும் திட்டம் துபாயினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் °டார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுக்காக தான் ஆற்ற வேண்டிய சமூகக் கடமையினை நிறைவேற்ற ஒரு காப்பீட்டு நிறுவனம் அரசுக்கு தேவைப்படுமேயானால், தனியார் லாப நோக்கம் ஏதுமற்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தான் மக்கள் நலம் பேணும் அரசு தேர்வு செய்திருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை? குறைந்த விலைப்புள்ளி என்ற கருத்து இங்கே ஒரு தனியார் நிறுவனம் அரசு (மக்கள்) பணத்தில் லாபம் ஈட்டுவதை நியாயப்படுத்த கூறப்படும் ஒன்றாகத்தான் உள்ளது. மேலும் அரசு செலுத்தும் பிரிமியத் தொகை ரூ. 517.307 கோடி. (4 ஆண்டுகால ஒப்பந்தமாக இருந்தாலும் கூட) உயர்த்தப்படு வதற்கான சாத்தியக் கூறும் உண்டு. பொதுவாக இம்மாதிரியான திட்டங்களில் உரிமை கோரும் விண்ணப்பங்கள் ஒரு ஆண்டில் மிகவும் அதிகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தென்றால் அடுத்த ஆண்டு பிரிமியத் தொகை பரிசீலிக்கப்பட்டு உயர்த்தப் படும். இத்திட்டத்தின்படி °டார் காப்பீட்டு நிறுவன மானது 35 சதவீதத்தை லாபமாகவும் இயங்கு செலவாகவும் தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 65 சதவீதத்தையே மக்களுக்கு வழங்குகிறது. இந்த 65 சதவீதத் தொகையானது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களின் லாபம், விளம்பரச் செலவு, ஆடம்பரங்கள், வல்லுனர்களுக்கு கொடுக்கும் அதீதமான ஆலோசனைத் தொகை போக மக்க ளுக்கு உண்மையாக போய்ச் சேர வேண்டிய தொகை எவ்வளவு என்று நம்மால் ஊகிக்க முடியும். அரசு செலவிடும் 517.307 கோடியில், நான்கு ஆண்டுகள் ஒப்பந்தப்படி 2069.204 கோடியில் பத்து சதவீதம் மக்களுக்கு பயனுள்ளதாக மாறினாலேயே ஆச்சரியம்தான். மீதமுள்ள 1800 கோடி தனியாருக்கு கைமாறுவது தவிர்க்க முடியாதது.
காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளின் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மட்டுமே பயனாளிகள் சிகிச்சை பெறமுடியும். அரசு மருத்துவ மனைகளில் உள்ள கட்டண வார்டுகளை இதில் சேர்ப்பதற்கு அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இதில் பெருந்தொகை தனியார் நிறுவனங்களுக்கே செல்லும்.
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பொதுத்துறை அரசு மருத்துவ மனைகளைச் சேர்த்தாலும், எல்லாத் துறைகளும் இதில் பங்குபெற வாப்பில்லை. ஏற்கனவே அறிவித்த 51 வகை நோய்க ளுக்கும், அது சார்ந்த துறைகளுக்கு மட்டுமே, காப்பீட்டுத் திட்டம் அமலாகும். அதிலும் பொருளாதாரத்தின் அடித் தட்டில் உள்ள ஏழை எளியவர்களில் காப்பீட்டுத்திட்டத்தில் பயனடைபவர்கள்/ பயன் பெறாதவர்கள் அல்லது பயன்பெற தகுதியற்றவர்கள் என்ற இருவேறு நிலையில் சிகிச்சை அளிப் பதற்கான ஒரு மோசமான நிலைமை அரசு மருத்துவமனைகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் நிதியைக் கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளை மேலும் விரிவுபடுத்தலாம் என்ற வாதமும் அரசு பிரிமியத்தொகையின் ஒரு பகுதியை அரசு மருத்துவமனைகள் மூலமாக திரும்பப் பெறும் என்ற நிலைபாடும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நேரடியாக செலவு செய்வதை விடுத்து தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம், தன்னுடைய நிதியை தாரைவார்த்துவிட்டு மீண்டும் ஒரு பகுதியை (?) திரும்ப பெறுவதற்கு முயற்சி செய்வதாக கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.
இதே தொகையை அரசு தன்னுடைய பொதுத்துறை நல்வாழ்வு கட்டமைப்பின் மூலம் நேரடியாக செலவழித்தால் பலன் பன்மடங்கு இருக்கும் என்பது கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத உயர்நிலைப் பள்ளி மாணவன் கூட கூறமுடியும். இன்னொரு முக்கியமான அம்சம், காப்பீட்டுத் தொழிலின் அடிப்படை விதிமுறை அனுமதிக்கும் ‘திட்டத்திலிருந்து விலகும் உரிமை’ கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்டி ருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 466 பிரிமியத்தை அரசு செலுத்துகிறது. அக்குடும்பமானது முதல் வருடத்திலேயே 1 லட்ச ரூபாய்க்கு சிகிச்சை செய்து கொண்டால் அடுத்த மூன்று வருடத்திலும் எதுவும் கிடைக்காது என்ற நிலையில் ஏன் பிரிமியம் செலுத்த வேண்டும்? அப்படிப்பட்டவர்கள் திட்டத் திலிருந்து விலகினால் ஏராளமான பிரிமியத்தொகை அரசுக்கு மிஞ்சுமே?
ஒரு குடும்பத்திற்கு 4 வருடத்திற்கு உயர்சிகிச்சைக்கு ஒரு லட்சம் போதுமா?
மூன்றாவதாக, 1 லட்சம் காப்பீட்டுத் தொகை நோயாளிகளுக்கு உரிய பலனளிக்குமா என்பது. உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 4 வருடத்திற்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான செலவில் ஒரு லட்சம் மட்டும் °டார் காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இத்திட்டத்தின் கீழ் 51 நோய்களை உள்ளடக்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு கிடையாது. இருதய சிசிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை உள்ளிட்ட நோய்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் பட்டியலில் விடுபட்ட நோய்கள் ஏராளம்.
பட்டியலில் உள்ள நோய்களுக்கான சிசிச்சையளிப்பதற்கே, வேறு சில ஆய்வு சிகிச்சைகள் தேவைப்படுகிறது. இதற்கும் இத்திட்டத்தில் இடம் இல்லை. உதாரணத்திற்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு இத்திட்டம் உதவாது. இருதய அறுவை சிகிச்சைக்கு மட்டுமே இது உதவிடும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் ஆஞ்சியோ ஆய்வை, இத்திட்டத்தின்படி செய்து கொள்ள முடியாது. ஆஞ்சியோகிராம் சோதனைக்குப்பின் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே, ஆஞ்சியோகிராம் சோதனைக்குரிய தொகையை இலவசமாக காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறமுடியும். ஆஞ்சியோகிராம் சோதனை, அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற முடிவை கொடுத்தால், இந்த சோதனைக்கான கட்டணத்தை காப்பீட்டுத்திட்டம் வழங்காது. இதேபோல, புற்றுநோய்க்கட்டி என்ற சந்தேகத்தின் பேரில் அதை உறுதி செய்ய தேவைப்படும பரிசோதனை களுக்கும் புற்றுநோய் என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, காப்பீட்டுத் திட்டத்தில் பணம் கிடைக்கும் (அதற்கும் உச்சவரம்பு உண்டு!) புற்றுநோய் அல்லாத பிற கட்டிகள்/நோய்கள் என்று தெரியவந்தால் அதற்கான செலவீனங்களை காப்பீட்டுத் திட்டத்தை நம்பி ஏமாறும் ஏழைக்குடும்பம், தன் வருமானத்திலிருந்தோ, கடன் வாங்கியோ செலவு செய்ய வேண்டும்.
இந்த 51 நோய்களிலும் சிகிச்சைக்குப்பின் செய்ய வேண்டிய சிகிச்சைக்கான செலவீனங்களும் இதில் அடங்காது. உதாரணத் திற்கு, ஒருநபர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்
னுயைடலளளை முறையினால் (தனியார் மற்றும் அரசு மருத்துவ மனையில்) சிகிச்சை பெற்று வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். (மாதச் செலவு சுமார் ரூ 2000) அந்த நபர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து கொண்டாலும் அதற்குப்பின் குறைந்தபட்ம் 3 முதல் 5 வருடங்களுக்கு மாதத்திற்கு ரூ 3000 - 5000 செலவு செய்து தொடர் சிகிச்சையை பெற வேண்டியதிருக்கும்.
குறிப்பிட்ட 51 வகை நோய்களும், மருத்துவ நோய்கள் பெருமளவிற்கு விடுபட்டுள்ளன. சாதாரண வைர° நோய்களுக்கு (டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை) மலேரியா, எலிஜுரம் போன்ற எந்த தொற்று நோயும் (சமீபத்திய பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட) இதில் சேர்க்கப்படவில்லை. இதுபோன்ற நோய்களால் இறப்பவர் எண்ணிக்கை, பட்டியலிடப்பட்டுள்ள எல்லா அறுவை சிகிச்சை நோய்களால் இறப்பவர் களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். இதைத்தவிர தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நோய்களான சக்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் ஆகியவற்றிற்கான சிகிச்சையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியாது.
இந்த 51 நோய்களுக்கும் சிகிச்சைக்கான செலவு ஒரு லட்சத்திற்குள் முடிந்துவிடும் என்ற உத்தரவாதமும் கிடையாது. ஒரு லட்சத்திற்கு மேல் ஆகும் கூடுதல் தொகையை நோயாளி தனது சொந்த பணத்திலிருந்துதான் செலவு செய்ய வேண்டும். அதற்கான வசதி ஆண்டுக்கு 72000 ரூபாய் வருமானம் ஈட்டும் குடும்பத்தில் எப்படி இருக்க முடியும்? சிகிச்சை பெறும் ஒரு சிலர் அரசை வாழ்த்துவதை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப் படுத்திக் கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கைகள் இத்திட்ட த்தின் வெற்றி என்ற தோற்றத்தை உருவாக்க உதவுமே தவிர உண்மையான வெற்றியை இது பிரதிபலிக்காது. சிகிச்சையையும் துவக்கி நடுவிலும் கைவிட முடியாமல் கடனாளியாகும் நிலைக்கே இவர்கள் தள்ளப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் சராசரியாக 5 பேர் என்று கணக்கிட்டால் (கணவன்-மனைவி, பெற்றோர் மற்றும் ஒரு குழந்தை) கூட உயிர்காக்கும் உயர் சிகிச்சை தேவைப்படுவர் நான்கு ஆண்டுகளில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியாது. இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலமைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் ஒருலட்சத்திற்குள் செய்துவிட முடியும் என்பது சற்று கடினமான விஷயம்தான். இத்திட்டம் ஜூலை 2009இல் அமலுக்கு வந்தது 2012ஆம் ஆண்டு சிகிச்சை பெறுபவர் அன்றுள்ள விலைவாசி நிலைமையில், இத்திட்டம் யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற நிலையை அடைந்துவிடும்.
இதைவிட முக்கியமானது, போரே கமிட்டியின் பரிந்து ரையின் முக்கிய அம்சமான நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது கைவிடப்பட்டு நோய்வந்த பின்பு செலவீனங்கள் அதிகமாகக்கூடிய அறுவைசிகிச்சை களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் தவறான அரசின் சுகாதார அணுகுமுறை இதிலும் தொடர்கிறது. உதாரணமாக சுத்தமான குடிநீரும், கொசு ஒழிப்புத் திட்டங்களும், சத்துணவு கிடைக்கப் பெறல் ஆகியவைகளால் தொற்று நோய்களை தடுக்க முடியும். இருதய நோயைத் தடுக்காமல் அதற்கான அறுவை சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவதை வைத்து அரசின் பொதுத்துறை சுகாதாரக் கொள்கைகளானவை, தனியார் மருத்துவ மனைகளுக்கும், மருந்து உற்பத்தியாளர்களுக்கும் சந்தை அமைத்துக் கொடுக்கும் பணியை செய்யும் நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியதிருக்கிறது.
நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியுமா?
நான்காவது, இந்த தனியார் நிறுவனங்களின் செயல்பாடு குறித்த அம்சம் இந்த நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனங்கள் பயனாளி களை எவ்வாறு ஏமாற்றி வருகிறது என்பதை மையமாக வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மைக்கேல் மூர் தயாரித்துள்ளார். 2006இல் இவர் இயக்கிய “சிக்கோ” என்ற ஆவணப்படமானது, உலகின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்தப்படத்தை இயக்கும் யோசனை மைக்கேல் மூரின் மூளையில் உதித்ததும், நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனங்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் விபரங்களை மின் அஞ்சல் மூலமாக தனக்கு அனுப்புமாறு ஒரு விளம்பரத்தை கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் 1100க்கும் அதிகமானோர் பதில் அனுப்பியிருந்தனர், ஒரே நாளில் 12000 பேரும் ஒருவாரத்திற்கு ஒன்றரை லட்சம் பேரும் மின் அஞ்சல் அனுப்பியிருப்பதாக மூர் கூறுகிறார். ஒவ்வொரு நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்திலும் சிகிச்சை பெற்றவர் அனுப்பும் விண்ணப்பத்தை நிராகரிப்பதற் கென்றே விசேஷ அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த விசேஷ அதிகாரிகளில் ஒருவர் “என்னுடைய செயல்பாடும், ஆண்டுச் சம்பள உயர்வும் நான் எவ்வளவு விண்ணப்பங்களை நிராகரித் திருக்கிறேன் என்பதிலும் எவ்வளவு தொகையை மறுத்திருக் கிறேன் என்பதைப் பொறுத்ததுதான்” என்று வெளிப்படை யாகக் கூறுகிறார்.
1960களில் அமெரிக்காவில் நடைபெற்ற முக்கியமான விவாதங்களில் ஒன்று மக்கள் நல்வாழ்வை சமூகமயமாக்குவது என்பதே! மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதை ஒரு சோசலிச கருத்தோட்டமாக பிரச்சாரம் செய்து எப்படி முறியடித்தனர் என்பதையும் இப்படம் கூறுகிறது. தற்போது அமெரிக்காவில் காப்பீட்டுத் திட்டம் இல்லாத முப்பது சதமான பேருக்கு அரசே பிரிமியம் வழங்கி காப்பீட்டுத் திட்டத்திற்குள் சேர்க்க வேண்டும் என்று ஒபாமா கூறியிருக்கும் கருத்திற்கு, வலது சாரிகள் இலவச பிரிமியம் என்ற கோட்பாட்டை எதிர்ப்பதையும், காப்பீட்டு பாதையே கூடாது, அரசே எல்லா நல்வாழ்வு சேவைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று நல்வாழ்வு ஆர்வலர்கள் கூறுவதுமான சர்ச்சை தற்போதும் நடைபெற்று வருகிறது.
இத்தகைய தில்லுமுல்லுகளை சுட்டிக்காட்டிய பொழுது, இத்திட்டத்தின்படி அரசு செலுத்தும் பிரிமியம் தொகையில் 65 சதவீதத்தை கண்டிப்பாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என்று அரசு தரப்பில் இருந்து பதில் வருகிறது. இவர்கள் வெளியிட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளாகவே உள்ள நிலையில், இந்த 65 சதவீத செலவை எட்டுவதற்கு ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்காலத்தில் ஒரு பெரிய மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அரசு தரப்பிலும் இது போன்ற கேள்விகளுக்கு பதில்கள் வந்த வண்ணம் உள்ளது உதாரணத்திற்கு அரசு அலுவலர்களுக்கு இதே °டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், இதுவரை அரசு ஊழியர்கள் 154.22 கோடி ரூபாயை பெற்றிருக்கிறார்கள் என்றும் இந்நிறுவனத்திற்கு அரசு செலுத்திய பிரிமியம் வெறும் 121.7 கோடிதான் என்றும் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 கோடி (விண்ணப்பத் தொகை - பிரிமியத் தொகை + இயங்கு செலவு) நஷ்டமடைந்திருப்பதாக அரசு தரப்பு கூறுகிறது. நடைமுறையில் நஷ்டமடைவதாக கூறும் வியாபார நிறுவனங்கள் கூறும் நஷ்டம் என்பது மதிப்பீட்டு நஷ்டம். வருமானம் மற்றும் செய்யப்பட்ட உண்மைச் செலவு இதற்கு இடையில் இருக்கும் நஷ்டமே பணநஷ்டம். ஒரு இயந்திரம் வாங்கினால் 30 சதவீதத்தை தேய்மானமாக செலவில் எழுதி விட்டாலும் நடைமுறையில் 30 சதவீதம் தேய வேண்டும் என்று அவசிய மில்லை. ஆனால் பண நஷ்டத்தில் ஒரு நிறுவனம் இயங்க முடியாது. காப்பீட்டு நிறுவனம் அடைந்ததாக அரசு கூறும் நஷ்டம் என்பது பண நஷ்டமாகும். இது ஒரு வியாபாரத்தில் நடைபெறவே முடியாது. எனினும் துணிச்சலாக இத்தகைய பதில்களை அரசு கூறிவருகிறது.
அரசே ஒரு காப்பீட்டு அமைப்புதான்
ஐந்தாவது முக்கியமான அம்சம்: மக்கள் நல்வாழ்விற்கான அரசின் திட்டமிடல் பற்றிய கேள்வி. அரசு என்பது என்ன? அது மக்கள் அமைப்புதான். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லை என்றால் அதற்கான செலவில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் மனிதன் சமுதாயமாக வாழ்கிறவன். எனவேதான் மக்களின் நல்வாழ்வு செலவை மொத்தமாக மதிப்பிட்டு அதற்காக திட்டமிடும் பொறுப்பு அரசிடமே உள்ளது. இதற்காக வரிவசூலிக்க அரசுக்கு உரிமை உண்டு. வரி செலுத்துபவர்ககளில் பலர் அவர்கள் செலுத்திய வரித்தொகையளவிற்கு சிகிச்சை பெற்றிருக்க வேண்டியதில்லை. எனினும் எனக்கு நோய் வந்தால் அரசு கவனிக்கும் என்ற உத்தரவாதமே, நோய் வருவதற்கான தடுப்பு அரணாக செயல்படும். இன்றும் கூட நாம் செலுத்தும் வரிகளில், செலுத் தப்பட்டதற்கான காரணத்தை நாம் அனைவரும் அனுபவிப்பது கிடையாது. எனினும் நாம் வரி செலுத்துகிறோம். அது நமது சமுதாயக் கடமை அது நமக்கு ஒரு பாதுகாப்பை தருகிறது. இந்த வகையில் அரசே ஒரு காப்பீட்டு அமைப்புதான். எனினும் ஏற்றதாழ்வான வருவாய் ஈட்டும் மக்கள் கூட்டத்திடம் எல்லோரும் சரிசமமாக அனைத்து விஷயங்களுக்கும் வரி செலுத்துங்கள் என்று வலியுறுத்தமுடியாது. யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை அன்றைக்குள்ள சூழ்நிலையில் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் இந்த கருத்தோட்டத்தில் ஒரு தலைகீழ் மாற்றம் உலகமயமாக்கல் கட்டத்தில் ஏற்பட்டு விட்டது. “நான் ஏன் அடுத்தவனுக்காக செலவு செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தை மக்களின் ஆழ்மனதில் பதிய வைத்த பண்பாட்டு வேலையை உலகமயமாக்கல் செய்து விட்டது. ஒவ்வொருவரும் மக்கள் கூட்டத்திடமிருந்து தனி நபர்களாக்கப்பட்டுள்ளனர். கூட்டமாக பயன்படுத்தும் மேஜை தொலைபேசியிலிருந்து, ஒருவர் மட்டுமே பயன்படுத்து கைபேசி பண்பாட்டிற்கு உலகமயமாக்கல் கொண்டு வந்து விட்டது. ஆகவே பயனாளி மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து விட்டது. இந்த கோட்பாட்டை மக்கள் நல்வாழ்விற்குள் நடைமுறையில் புகுத்த முடியாது. அப்படிச் செய்தால் மனிதனின் அடிப்படை மனிதாபிமான உணர்வு கேள்விக்குள்ளாக்கப் பட்டுவிடும். அப்படியும் புகுத்தினால் மக்கள் கூட்டமே அழிய நேரிடும். இந்த முரண்பாட்டைபும் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தும் படைப்பாற்றல் புத்தி உலகமயமாகக்கல் கொள்கைகளுக்கு இருப்பதால்தான் நல்வாழ்வு காப்பீட்டு அமைப்புமுறை உருவாக முடிந்தது. இது மக்கள் நலனில் அரசின் கடமையை சுருக்கிவிடும் வேலையை செய்து வருவதால், அத்துணை காரணங்களுக்கும் அடித்தளமாக விளங்குவது உலகமயமாக்கலும் லாபவெறியும் என்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உடனடியாக அரசு செய்ய வேண்டியது
¨ அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டத்தை உரிய முறையில் பரிசீலனை செய்து, எல்லா உயிர்க்கொல்லி நோய்களையும் சேர்த்து அதற்கான சிகிச்சைக்கு முழுமையான மற்றும் தொடர் சிகிச்சைகளுக்கு வேண்டிய நிதியை திரட்டி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்க ளோடு தொடர்பு கொண்டு ஒரு மாற்றுத் திட்டத்தை அறிவிக்க அரசு முன்வரவேண்டும்!
¨ அரசு தன் கடமையிலிருந்து நழுவி, இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்களை நம்பியிராமல், அரசு பொதுத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்தி எல்லா சிகிச்சை களைபும் இலவசமாக எல்லாருக்கும் வழங்க வேண்டும்!
¨ இதுபோன்ற திட்டங்கள் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடிந்துவிடும்; தொடர்ச்சியான சிகிச்சைக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இது போன்ற திட்டடங்களை கைவிட வேண்டும்!
¨ உயர்சிகிச்சையை வணிகமயமாக்கிடும் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகளை உரிய முறையில் ஆய்வு செய்து அவர்கள் அரசிடம் இருந்து பெறப்பட்ட வரிச் சலுகைகளுக்கு இணையான இலவச சிகிச்சையை அரசு பரிந்துரைக்கும் ஏழைகளுக்கு அளிப்ப தற்கான ஒரு கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்!
உடனடியாக சமூக ஆர்வலர்களும் பொறுப்புள்ள எதிர்கட்சிகளும் செய்யவேண்டியது
இத்தகைய காரணங்களினால் சமூக உணர்வு படைத்தவர்கள் தனது கடமைகளிலிருந்து நழுவிச் செல்லும் அரசை அதனுடைய பாதையில் திரும்பப் பயணிப்பதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வை காப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுப் பாதையானது அரசு தன்னுடைய கடமையிலிருந்து வழுவிச் செல்வதையே பிரதிபலிக்கிறது. காப்பீட்டுப் பாதையும் எதிர் காலத்தில் ஒரு பெரிய மோசடி நடக்கவிருப்பதற்கான அறிகுறி உள்ள பாதை என்பதாலும், மக்கள் நல்வாழ்வு மோசமடைவதை தடுக்க திராணியற்றது என்பதாலும் இத்தகைய நடைமுறைகள் உடனடி பலனை மட்டும் வைத்து தீர்மானிக்காமல் நீண்டகால அடிப்படையில் பலன்தராது என்பதால் கடுமையாக எதிர்ப் பதற்கு சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும். அரசுடைய நலத் திட்டம் என்று இது அங்கீரிக்கப்பட்டு விட்டதால், இதை விமர்சித்தால் நாம் தனிமைப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இதை எதிர்க்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதை பொறுப்புள்ள எதிர்கட்சி களும் தவிர்க்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் செப். 2009

Thursday, 17 September 2009
அண்ணன், தம்பி சண்டையின் பின்னணியில்...
என்.சுரேஷ்
கிராமப்புறங்களில் உள்ள எளிய மக்கள் கிணறு தோண்டும் போது புதையல் கிடைத்தால் அது அரசுக்கு சொந்தம். அதுவே அம்பானிகளுக்கு கிடைத்தால் கரும்பு தின்ன கூலி கொடுக்கும் நமது மத்திய அரசு.
ஓஎன்ஜிசி மூலம் இந்திய எண்ணெய் வயல்களிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் விலை இந்திய உற்பத்தி செலவிற்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அம்பானிகளுக்கு, அரசு நிலத்திலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவிற்கு சர்வதேசவிலை கொடுக்க வேண்டுமாம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது முகவரி இல்லாமல் இருந்தார்கள் அம்பானிகள். இன்று, அவர்கள் குடும்பச் சண்டைக்கும் அரசு சொத்தை பங்கு போடுவதற்கும் பிரதம மந்திரி மற்றும் இலாகா மந்திரிகளும் நேரத்தை ஒதுக்குவதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.
எரிபொருள் தேவையில் 70 சதவீதம் இறக்குமதியை நம்பியே நம் நாடு உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. அதே நேரத்தில், எரிபொருள் கண்டுபிடிப்பதற்கான அகழ்வாராய்ச்சிக்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது என்ற காரணத்தை கூறி, பாஜக அரசு இத்துறையில் தனியாரை ஈடுபடுத்தியது. காங்கிரசும் எஜமான விசுவாசத்துடன், நீயா-நானா? என்று அம்பானி களுக்கு போட்டி போட்டுக் கொண்டு; சேவை செய்து கொண்டு இருக்கிறது,
ஆந்திர மாநிலத்தில் பாயும் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றின் டெல்டா பகுதி மற்றும் இந்நதிகள் கலக்கின்ற வங்கக் கடலின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியையும் சேர்த்து கிருஷ்ணா-கோதாவரி படுகை என்றழைக்கின்றனர். இப்பகுதிதான் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். பாம்பே ஹை எனப்படும் மும்பை ஆழ்கடல் எண்ணெய் வயலை காட்டிலும் பன்மடங்கு பெரிய பரப்பளவு கொண்டது. சுமார் 28,000 ச.கி.மீட்டர் நிலப்பரப்பிலும். சுமார் 21,000 ச.கி.மீட்டர் ஆழ்கடல் பகுதியில் 200 மீ. ஆழத்திலும். சுமார் 18,000 ச.கி.மீ ஆழ்கடலில் 200 மீ முதல் 300 மீ ஆழத்திலும் இப்படுகை பரந்து விரிந்துள்ளது,
நமது நாட்டின் புதிய எண்ணெய் வள அகழ்வாய்வு மற்றும் உரிமம் (என்இஎல்பி) வழங்குதல் கொள்கை அடிப்படையில், ஆங்காங்கு கண்டறியப்பட்ட 57 எண்ணெய் வயல்களை (19 ஆழ் கடல். 9 முகத்துவாரம். 29 நிலப்பரப்பு) தனியார் வசம் ஒப்படைத்து, அகழ்வாய்வு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்ய தனியார் துறைக்கு உரிமம் வழங்கப்பட் டது. ஆர்ஐஎல் என்றழைக்கப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் சுமார் 12 பகுதி களை மேற்கண்ட முறையில் 2000ஆம் ஆண்டில் ஏலத்திற்கு எடுத்தது, என்இஎல்பி கொள்கையின்படி இத்தனியார் நிறுவனங்கள் எண்ணெய் உற்பத்தி செய்யவும்; அரசாங்கத் துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன, மேலும் இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்திலும் பங்கு பெற்றுக் கொள்ள இத்தகைய உரிமம் வகை செய்துள்ளது,
இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பிளாக் 6 எனப்படும் பகுதியை கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்ஐஎல் மற்றும் என்ஐகேஓ நிறுவனமும் இந்திய அரசிட மிருந்து எண்ணெய் உற்பத்தி செய்ய உரிமம் பெற்றன.
ரிலையன்ஸ் நிறுவனம். ஒன்றுபட்ட குழுமமாக செயல்பட்டுக்கொண்டிருந்த காலத் தில். 2003ம் ஆண்டு மேற்கு உத்திரப்பிரதேசத்தில் தாதர் என்ற இடத்தில். எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட் என்ற பெயரில் மின் நிலையம் ஒன்றை நிறுவி, அதற்கு தேவையான எரிவாயுவை கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து கொண்டு செல்ல திட்டமிட்டது. ஆனால் 2005ல் இக்குழுமத்தில் பிளவு ஏற்பட்டு இதில் பங்கு பெற்ற பல்வேறு துறைகளின் நிர்வாக உரிமைகளும் அம்பானி சகோதரர்களிடையே கைமாறின. மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியிடம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையும்; இளைய சகோதரர் அனில் அம்பானி வசம் மின் உற்பத்தி நிர்வாகமும் வந்தது. ஆர்ஐஎல் பிளவுண்டு ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் எனப்படும் நிறுவனம் உருவானது.
தாதர் மின்நிலையத்திற்கு எரிவாயு சப்ளை செய்ய 2005ல் ஆர்என்ஆர்எல் மற்றும் ஆர்ஐஎல் நிறுவனத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி.ஆர்ஐஎல் நிறுவனம், என்டிபிசி எனப்படும் தேசிய அனல் மின் நிலைய திட்டத்திற்கு எந்த விலையில் எரிவாயு விற்பனை செய்யுமோ, அதே விலையில் தாதர் மின் திட்டத்திற்கும் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2003ல் என்டிபிசி நிறுவனம் எரிவாயு சப்ளைக்காக டெண்டர்கள் வரவழைத்தது, இந்த டெண்டரில் ஆர்ஐஎல் வெற்றி பெற்று, ஒரு எம்எம்பிடியு 2.34 டாலர் என்ற விலையில் எரிவாயு சப்ளை செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டது.
மேற்குறிப்பிட்ட விலை நிர்ணயம், அதாவது ஒரு யூனிட் எரிவாயு 2.34 டாலர் என்ற அடிப்படையில் ஆர்என்ஆர்எல் நிறுவனத்திற்கு விற்க முடியாது என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வாதம். இதற்கு பல காரணங்களை கூறுகிறது ஆர்ஐஎல்.
ஆர்என்ஆர்எல் நிறுவனத்தின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகும் 2.34 டாலர் என்ற அடிப்படையில் விற்க அரசாங்கம் மறுத்து விட்டது, இந்த 2.34 டாலர் என்பது சந்தை தீர்மானித்த விலையல்ல என்றும், மேலும் எரிவாயு அரசின் சொத்து. அதை இரு சகோதரர்களின் விருப்பப்படி விலை நிர்ணயம் செய்து விட முடியாது.
புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் எரிவாயு சப்ளை செய்ய ஆர்ஐஎல் மறுத்து விட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத் தை நாடியது. மும்பை நீதிமன்றம் வழக்கை விசாரித்தது.ஆர்ஐஎல் மற்றும் ஆர்என்ஆர்எல் நிறுவனத்திற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, நிறுவனத்திற்கு தேவையான எரிவாயுவை சப்ளை செய்ய தக்க ஏற்பாடு செய்ய ஆணையிட்டது. ஆர்என்ஆர்எல் நிறுவனமே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. மும்பை உயர்நீதி மன்றத்தின் ஆணையை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையிலேயே எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்றும் அதில் முறையீடு செய்துள்ளது.
முகேஷ் அம்பானியும் அனில் அம்பானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்து கிறார். தங்கள் நிறுவனத்தின் மீது தேவையற்ற, அடிப்படையற்ற, ஆதாரமற்ற, போதிய தகவல் கள் அற்ற விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளது என குமுறுகிறார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கமிட்டியின் மு.ஆ. சந்திரசேகர், ஆர்ஐஎல் நிறுவனத்தில் செலவினம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என அனில் அம்பானி கூறு கிறார்.
கே.எம்.சந்திரசேகர் அவர்கள், முகேஷ் அம்பானி சேர்ந்து செயல்படும் என்ஜினீயரிங் கம்பெனி மீது சந்தேகப்படுகிறார்.
அனில் நிறுவனம், அரசாங்கம் தலையிட்டு, மத்திய அரசின் தணிக்கைக்கு உட்படுத்த உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது.
மேலும் தணிக்கை அறிக்கையை மக்களி டையே சமர்ப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது.
முதலாளித்துவம் தோன்றும்போது, அது தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள் ளும் என்று மார்க்ஸ் சொன்னது நினைவிற்கு வருகிறது. இந்த பிரச்சனை சம்பந்தமாக இடதுசாரிகள், இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லி உருவாக்கிய விழிப்புணர்வைவிட முதலாளித்துவ நெருக்கடி (அம்பானி நெருக்கடி) அனில் அம்பானி, தன் சகோதரனுக்கு எதிராக (முதலாளித்துவம் முதலாளித்துவத்திற்கு எதிராக) ஏற்படுத்திய நெருக்கடி பெரிய தாகும். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து அரசின் மீது அக்கறை உள்ளது போல்; பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.
சாதாரண மக்கள் குடும்பச் சொத்து பாகப்பிரிவினை செய்யப்படும்போது சொந்த வீட் டை விற்று பணத்தை பிரித்துச் சென்று, வாடகை வீட்டில் குடியிருக்கக்கூடிய சூழ்நிலை. ஆனால், அம்பானிகள் பிளவுபட்டு, சொத்து பிரிந்தபிறகு பணக்கார வரிசையில் ஐம்பதாவது இடத்தில் இருந்து முதலாம் இடத்திற்கு வரமுடிகிறது. இது காங்கிரசும் பாஜகவும் எந்த அளவிற்கு அம்பானிகளுக்காக உழைக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் 2005-06ல் 76.240கோடி ரூபாய் லாபமும், 2006-07ல் 81.550 கோடி ரூபாயும் அடைந்துள்ளது. பங்குத்தொகையாக 22.886 கோடி ரூபாயில் இருந்து 2006-07ல் 26.805 கோடி ரூபாயாக வழங்கியுள்ளது. சுங்க வரி, கலால் வரி, சேவை வரி, சொத்து வரி, வட்டி. கடன் என்று பல்வேறு வரிகள் மூலமாக அரசுக்கு ரூ.1,47,635 கோடி அளித்துள்ளது. கையிருப்பு மற்றும் உபரி பணமாக 2005-06ல் 3,59,181 கோடி ரூபாயும், 2006-07ல் 4,16,494 கோடி ரூபாயும் உள்ளது. இவ்வளவு அதிகமான லாபத்தையும் கையிருப்பையும் வைத்துள்ள, பொன்முட்டையிடும் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்தாமல் தனியார் துறையை ‘தனியாக” கவனிப்பது ஏனோ?
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள்.
தீக்கதிர் 17/09/2009 - வியாழன்

“இந்த சண்டை ஓயாது, சமரசம் போரில் கிடையாது’’

“அன்று சனிக்கிழமை இல்லாதிருந்தால், ஒரு வேளை அவள் பள்ளிக்கு சென்றிருக்கலாம். இன்று உங்களைப்போல் ஒரு பட்டதாரி மாணவியாகக்கூட இருந்திருப்பாள். அன்று செல்விக்கு 13 வயது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. வனத்துறையினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, வாழ்வைத் தொலைத்து சிறைப்பட்டு, தட்டுத்தடுமாறி வர்க்கப் போராளியாக இன்று உங்கள் முன் நிற்கிறாள்’’ என்று வாச்சாத்தி எனும் மலைவாழ் மக்கள் கிராமத்திலிருந்து வந்திருந்த அந்தப் பெண்ணை மாணவிகள் முன்னே அறிமுகப்படுத்துகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம். ஏறத்தாழ தம்மைவிட சில வயதே மூத்த அந்தப் போராளியை சேலத்தில் நடைபெற்ற மாணவியர் மாநில மாநாட்டுப் பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாய் எழுந்து நின்று அரங்கம் அதிர கைதட்டி வரவேற்கின்றனர்.
“1992 ஜூன் மாதம் 20ம் தேதி அது. தோட்டத்துல இருந்த எங்கள பாரஸ்ட்டுக்காரங்க லாரியில அள்ளிட்டுப் போனாங்க... தனித்தனியா இழுத்துட்டுப்போயி மறவுலவச்சி 18 பேரையும்......... (பேச முடியவில்லை அழுகிறார், பேசமுயற்சித்தார், நாக்கு குழறியது. அரங்கம் கூட சேர்ந்தழுதது) வேணா........ யாருக்கும் இப்படி ஒரு கொடுமை வேணா........ 17 வருஷமாச்சு, கேசு நடந்துட்டே இருக்கு, கம்னூஸ்டுக்காரங்க பார்த்துக்குவாங்க, என்.எஸ். தலைவரு பார்த்துக்கிருவாரு’’ விடாது தனது நெஞ்சை அழுத்திப் பிழியும் அந்த அக்கிரமத்தை நினைவிலிருந்து அகற்ற முடியாத துயரத்தோடு சென்றமர்ந்தார்.
சண்முகம் தொடர்ந்தார். விவசாய கிணறுகளை இடித்துத்தள்ளி, பம்பு செட்டுகளை நாசம் செய்து சொட்டுத் தண்ணீரோ உண்ண ஒரு பருக்கையோ மிஞ்சிடக் கூடாது என்று துவம்சம் செய்தார்கள். கோழி, ஆடுகளை அடித்துத் தின்றார்கள். வன்புணர்ச்சியில் 18 பெண்கள் சர்வ நாசம் செய்யப்பட்டார்கள். படையெடுப்பின் போது கூட இப்படி ஒரு வன்முறை அரங்கேறுமா எனத் தெரியாது. ஆளும் வர்க்கத்தின் போலீசும், வனத்துறையும் சேர்ந்து நடத்திய வன்முறை வெறியாட்டம் அது. சந்தனக்கட்டை கடத்தினார்களாம். அப்படியே இருந்தாலும் சட்டமில்லையா? அரூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள அந்த கிராமத்தில் நடந்த கொடூரம் 26 நாட்களாக வெளி உலகமே அறியாமல் மறைக்கப்பட்டது. வாச்சாத்தியின் கொடுமையை அறிந்தவர்களுக்கு வன்முறை என்றால் அதற்கு வரையறை இல்லை, இலக்கணம் ஏதுமில்லை என்பது தெரியும். காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை என மூன்று துறையும் மூன்று நாள் தங்கி மொத்த ஊரையும் அழித்துவிட்டு வெளியேறினர்.
“பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இப்படி ஒரு செயலை செய்திருக்க மாட்டார்கள்’’ என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 1968-ல் கீழ வெண்மணியில் 44 உயிர்கள் கொளுத்தப்பட்ட போதும் இப்படித்தான் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நான் நீதி கேட்டு தொடர் உண்ணாவிரதம் இருந்தேன். ஐந்தாவது நாள் அரசு என்னை கைது செய்தது. உச்சநீதி மன்றமே தலையிட்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் அடையாள அணி வகுப்புக்கு உத்தரவிட்டது. நாங்கள் பாதிக்கப்பட்ட 18 பெண்கள் உள்ளிட்டு 22 பேர். வனத்துறை காவலர்களுக்கு (குற்றவாளிகள்) ஆதரவாக 2500 பேர் திரண்டனர். நீதிபதி சொன்னார். “மீண்டும் என் கண் முன்னாள் அப்படி ஒரு கொடுமை நடந்து விடக்கூடாது சென்று விடுங்கள்.’’ 152 வனத்துறையினர், 108 காவல்துறையினர்,9 வருவாய்த்துறையினர் மொத்தம் 269 பேர் குற்றவாளிகள், 2000 பக்க குற்றப்பத்திரிகை 17 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது. இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லை.
நிறைமாத கர்ப்பிணியான இந்திராணியையும் உச்சி மலையில் ஏறி சந்தனக்கட்டை கடத்தினார் என்று சிறையில் தள்ளினர். சிறையிலே பிறந்த அவரது குழந்தைக்கு ஜெயில் ராணி என்று பெயர் வைத்தாராம். ஒரு வாரத்தில் குழந்தை இறந்தது, இரண்டு மாதத்தில் இந்திராணியும் இறந்து விட்டார். இதோ இந்த வீரத்தாய் தோழர் பரந்தாயியை முழு நிர்வாணமாக்கினர், கைகால்களைக் கட்டி அடித்து நொறுக்கினர். அத்துனையும் கடந்து இன்று இவர் மலை வாழ் மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். (தோழர் பரந்தாயி எழுந்து முஷ்டியை உயர்த்துகிறார்.)
விம்மி வரும் அழுகையும், பொங்கும் ஆவேசமுமாய் அந்தக் கொடுமையை தோழர் பெ.சண்முகம் விவரிக்க ஒட்டுமொத்த கூட்டமும் உறைந்து போனது. “சந்தனக்கட்டை, கடத்தியிருந்தால் அதே ஓலக்குடிசையில் ஏன் காலம் தள்ள வேண்டும்? அதிகார வர்க்கமும், ஆளும் கட்சியினரும், அரசியல் ரவுடிகளும் தான் கடத்தல் பேர்வழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவும் வனத்துறையின் கண்ணசைவின்றி எவனும் சந்தனக் கட்டைகள் கடத்த முடியாது. தங்களுக்கு விருப்பமான வழக்கென்றால் ஞாயிற்றுக்கிழமை கூட நீதிமன்றம் நடக்கும். ஏன் இந்த வழக்கில் இவ்வளவுதாமதம்?
தனது கேள்விகளால், சத்திய ஆவேசத்தால் அரங்கை அதிரவைத்து சண்முகம் உரையை முடிக்க, யுவதிகள் ஆர்ப்பரித்து எழுந்தனர் “இந்த சண்டை ஓயாது, சமரசம் போரில் கிடையாது’’, ஆவேச முழக்கங்களால் அரங்கை நிறைத்தனர். அரங்கம் அமைதி பெற வெகு நேரமானது.
அடுத்து, நாடும் ஏடுமறிந்த கல்வியாளர் முன்னாள் துணைவேந்தர் வே. வசந்தி தேவி வந்தார். ’’ நான் பேச வந்தது மறந்து விட்டது, நமது யுத்தம் எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து விட்டீர்கள், இந்த வீரப்பெண்மணிகளுக்கு இத்துணை கொடூரங்களையும் எதிர்த்துப் போராடும் சக்தி எங்கிருந்து வந்தது! சமுதாயத்தின் கண்முன்னே திரை போட்டு மூடி மறைக்கப்பட்ட கொடுமை இது. இந்த வீரம் வெல்லட்டும்.’’ என்று வாயார மனதார வாழ்த்தினார்.
வாச்சாத்தி கொடூரம் அரங்கேறிய போது தங்களுக்கு ஐந்தோ, பத்தோ வயதிருக்கும். ஆனாலும் மறைக்கப்பட்ட சம்பவங்கள், வரலாறுகள் மனதில் அழுத்த தங்கள் எதிரி யார் என்று அறிந்துவிட்டதால் இனி இலக்கு சுலபமானதே என்பதை அந்த யுவதிகள் உணர்ந்து தெளிந்தனர் என்றால் அது மிகையில்லை.
தீக்கதிர் 15/09/2009 - செவ்வாய்
Subscribe to:
Posts (Atom)